Friday, July 11, 2025
Homeபொழுதுபோக்குGunaa Heroine: குணா படத்திற்கு பின்பு சினிமாவை விட்டு விலகிய ரோஷினி.. இனி வேண்டாம்.. இதுதான்...

Gunaa Heroine: குணா படத்திற்கு பின்பு சினிமாவை விட்டு விலகிய ரோஷினி.. இனி வேண்டாம்.. இதுதான் காரணமாம்..!

Date:

- Advertisement -

உலகநாயகன் கமல்ஹாசனின் ஒரு சில படங்கள் ரிலீஸ் ஆனா சமயத்தில் வரவேற்பை பெற தவறியுள்ளது. ஆனால் காலம் சென்றும் அப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களாக அமைந்து வருகின்றது. அன்பே சிவம், மகாநதி, விருமாண்டி, ஆளவந்தான் ஆகிய பல படங்கள் வெளியானபோது வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருப்பினும் அந்த படைப்புகள் தற்போது ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

Actress roshini
Actress roshini

அந்த வகையில் தற்போது குணா திரைப்படமும் இணைந்துள்ளது. 1991 ஆம் வருடம் சந்தானபாரதியின் இயக்கத்தில் கமலின் நடிப்பில் வெளியான குணா திரைப்படம் மிகுந்த விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் வெற்றிப்படமாக அமையவில்லை. இருந்தாலும் 31 ஆண்டுகளுக்கு பிறகு குணா திரைப்படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மலையாளத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் என்ற ஒரு திரைப்படம் ரிலீசாகி வெற்றி அடைந்துள்ளது. அப்படம் கமலின் குணா திரைப்படத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பிறகு ரசிகர்கள் எல்லோரும் குணா திரைப்படத்தை தேடி பார்த்து வருகின்றனர். படத்தை பார்த்த அனைவரும் இப்படியான ஒரு படத்தை நாம் கொண்டாடுவதற்கு தவறிவிட்டோமே என வருத்தப்பட்டு வருகின்றனர்.

Guna film heroine Roshini
Actress roshini

Actress roshini

அந்த வகையில் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை தற்போது உண்டாக்கி வருகின்றது. இந்நிலையில் இப்படத்தில் கமல் வழக்கமான தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதைப்போல அவருக்கு இணையாக ஈடுகொடுத்து நடிகை ரோஷிணியும் இப்படத்தில் நன்றாக நடித்திருந்தார். அப்படத்திற்கு பிறகு ரோஷினி தமிழ் திரையில் பிரபலமான நாயகியாக வருவார் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதன் பின் ரோஷினி சினிமாவில் நடிக்க வில்லை.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : Mother Maiden Name என்பதற்குண்டான தமிழ் அர்த்தம்..!

ரோஷினி தான் நடித்த முதல் படமான குணா படத்திற்கு பின்பு சினிமாவை விட்டு விலகிவிட்டார். இந்நிலையில் குணா படத்திற்கு பிறகு ரோஷினி நடிப்பில் இருந்து விலகியதற்கு காரணம் என்ன என்பதை குறித்து இயக்குனர் சந்தானபாரதி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ரோஷினியை குணா படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தோம். ஆனால் அவருக்கு நடிப்பதில் ஆர்வம் கிடையாது. மேலும் அவர் நன்கு படித்தவர், அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களும் படித்தவர்கள். ஆகவே அவருக்கு படிப்பில் தான் ஆர்வம் இருந்தது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

குணா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அவர், நான் இனிமேல் படங்களில் நடிக்கமாட்டேன் என சொல்லிவிட்டார். அதன் பிறகு ரோஷினி சினிமா சம்மந்தப்பட்ட யாரிடமும் தொடர்பு கிடையாது என கூறினார் சந்தானபாரதி. இப்படிப்பட்ட நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்த பிறகு குணா திரைப்படத்தை பார்க்கும் திரைப்பட ரசிகர்கள் அனைவரும், நடிகை ரோஷினியை பற்றி தான் இணையத்தில் அதிகளவில் தேடி வருகின்றனர்.

ஆனால் ரோஷினியை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. மேலும் படக்குழுவினருக்கும் ரோஷினியை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. இன்று உலகில் ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டு குணா திரைப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பினையும், தன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த பாராட்டுதலையும் கண்டு ரோஷினி மகிழ்ச்சியில் இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : குணா பட கதாநாயகி ரோஷினி யாரு தெரியுமா?.. ஜோதிகாவின் சொந்த அக்காவா?.. உண்மை தெரியுமா?

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories