தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கேபிஓய் பாலா தனக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தான் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமான பாலா அதன் பின்னர் விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளில்பங்கேற்றார் என்பதும், குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அதுமட்டுமில்லாமல் சமூக சேவை செய்வதில் பாலா தீவிரமாக அக்கறைசெலுத்தி வருகிறார் என்பதும் சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தின் போது பொதுமக்களின் வீடு தேடி பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கப் பணம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார் என்பதையும் பார்த்தோம்.
மேலும் வாகனங்கள் செல்ல முடியாத சின்ன கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதியை செய்து தந்தார் என்பதும் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று அவர் சொன்னதே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கோடி ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் கூட செய்யாத உதவியை ஒரு சில 1000 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கக்கூடிய பாலா செய்து வருவதை கண்டு அவருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
இதையும் படிங்க : Meghalekha Kacharla At the Roti Kapada Romance Press Conference
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Love has come to KBY Bala
இந்த நிலையில் சமீபத்தில் பாலா தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றார். எனக்கு விரைவில் திருமணம் நடக்க போகிறது என்றும் என்னுடைய காதலி யார் என்பதை விரைவில் சொல்வேன் என்றார். உடனே மாணவ மாணவிகள் கர ஒலியுடன் உங்கள் காதலி யார் என்று கூறுங்கள் என்று கோஷம் எழுப்பினர். அதற்கு இன்னொரு முறை கண்டிப்பாக சொல்கிறேன் என்று அவர் கூறினார்.
மொத்தத்தில் பாலாவுக்கு காதல் வந்திருச்சு என்றும் விரைவில் அவருக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்பது மட்டும் உறுதியாக நம்பப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு நெருக்கமான விஜய் டிவியின் நண்பர்கள் பாலா ஒரு பெண்ணை காதலித்துக் வருவதாக கூறிய நிலையில், தற்போது அவரே இந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : நயன்தாரா, விக்னேஷ் சிவன் குறித்து ஜோதிடர் சொல்லியது நடந்துடுமோ? : சினிமா ரசிகர்கள்