சென்னை: விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், காசி விஸ்வநாதர்ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்தபோட்டோக்கள் இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

நடிகை தமன்னா விஷாலுடன் சேர்ந்து ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் தலைகாட்டாமல் இருந்த தமன்னா மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் நடித்ததில் மூலம்,திரும்பவும் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்த தமன்னா, காவாலா பாடலுக்கு சிறப்பான ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து விட்டார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு தமன்னாவின் ஆட்டமும் ஒரு காரணம் என்றுகூறும் அளவிற்கு, கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போட்டிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து அரண்மனை 4 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களும் அவருடைய கைவசம் உள்ளது.

காதலிக்கிறேன்: இப்படி பிஸியாக உள்ள தமன்னா, பாலிவுட் நடிகர் ஒருவருடன் டேட்டிங் போவதாகவும், இருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசுபரவியது.
சமூகவலைத்தளங்களில் பரவிய வதந்தியால் டென்ஷனான தமன்னா, ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், விஜய் வர்மாவை காதலிப்பதாக உறுதிப்படுத்தினார்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : நான் வாழ்க்கையில் நம்பிய 4 நபர்கள் இதில் 3 பெண்கள் ! ஆனால் அந்த நம்பிக்கையை ? வெளிப்படையாக பேசிய தனுஷ்..!
அதில், நான் அவரோடு சேர்ந்து நடித்தாலேயே அவருடன் காதல் வரும் என்று நினைக்கவில்லை. நான் எத்தனையோ நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். ஒருவர் மீது காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் தனிப்பட்ட முறையில் ஏதாவது விஷயம் பிடித்திருக்க வேண்டும். அது எதுவென எனக்குத் தெரியவில்லை என்று விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதிப்படுத்தினார் தமன்னா.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

Tamannaah Sudden Spiritual Journey
பக்தி முற்றிவிட்டது: தமன்னா எப்போது திருமண செய்தியை அறிவிப்பார் என்று எல்லோரும் ஆவலாக காத்திருக்கும் நிலையில், ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள இவர், காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க : வடஇந்திய ஸ்பெஷல் சுவையான ஆலு பராத்தா இது போல் செய்து பாருங்க ! இதோட சுவை வேற லெவல்ல இருக்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அங்கு சிவனுக்கு பாலாபிஷேகம் செய்வது, மற்றும் கழுத்தில் மாலை அணிந்து வழிபாடு நடத்திய சில போடோக்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைபடங்களை பார்த்த நெட்டிசன்கள் அம்மணிக்கு பக்தி முத்திவிட்டது என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.