தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக முறையில் முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அம்மன் ஸ்தலங்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் ஆகியன நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை மற்றும் ஆடி அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்கள் மட்டுமல்ல எந்த நாளில் எல்லாம் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபட்டாலும் அம்மன் அருள் கிடைக்கும்.
reason for aadi thapasu and aadi viratham
ஆடி மாதத்தில் அம்பிகையின் சக்தி சிவனின் சக்தியை விட அதிகரித்து காணப்படும். இந்த ஆடி மாதத்தில் சிவ பெருமானே அம்பிகைக்குள் அடக்கம் என கூறுவார்கள். இருந்தாலும் உண்மையாகவே ஆடி மாதம் அற்புதம் நிறைந்த மாதம் தானா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருப்பதுடன் அதை நிரூபிக்க சாட்சி உண்டா என்பது தான் பலரது கேள்வியாக உள்ளது. அந்த கேள்வி மற்றும் சந்தேகத்தை போக்கும் வகையில் கொண்டாடப்படும் ஆடித்தபசு திருவிழா மேலும் அது உருவான காரணத்தை குறித்து இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆடித்தபசு என்றால் என்ன?
ஆடி மாதத்தின் அனைத்து தினங்களும் அம்மன் வழிபாட்டிற்குரிய தினங்களாகும். அம்மனே அனைத்துமாக இருப்பதால் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் மிகச் சிறப்பான, மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடித்தபசு. இது அம்பாளை மட்டுமே முதன்மைப்படுத்தி கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா வருடம் தோறும் தேரோட்டத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்னும் நோக்கத்திற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு எடுத்து உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ காட்சி கொடுத்த அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில். இக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இதையும் படிங்க : பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிந்து கொள்ள வேண்டும் வலப்பக்கமா.. இடப்பக்கமா..?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
ஆடித்தபசு வரலாறு
தபசு என்றால் ‘தவம்’ எனப்பெயர். தற்போது அமைந்திருக்கும் கோமதி அம்பாள் ஆலயத்தின் முன்பு, மைய மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை உள்ள இடத்தில் அந்த காலத்தில் சங்கன் மற்றும் பதுமன் என்ற 2 நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர் சிவபெருமான் மீது அதீத பக்தியும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கும் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தியும் கொண்டிருந்தார்கள். இருவரும் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று அவர்களுக்குள் வாதம் பண்ணி கொண்டனர். அது பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பார்வதி தேவியிடம் சென்று முறையிட்டனர். இதைக் கேட்ட அன்னையானவள், இருவரும் ஒன்று தான் என்று கூறினார். இதை தாங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வது என அவர்கள் பார்வதியிடமே கேட்டார்கள். அதற்கு உரிய காலம் வரும் போது அறிந்து கொள்ளலாம் என்று பதிலளித்து அவர்களை அனுப்பி வைத்தாள் அம்பிகை. பின் அம்பாள் சிவபெருமானை வேண்டி பிராத்தனை செய்தால், ஈசன் அம்பாளை பொதிகை மலை பகுதியில் புன்னை வனத்தில் தவம் இருக்கும்படி கூறினார்.
ஊசி முனையில் தவம் செய்த பார்வதி தாய்
சிவனின் கூறியப்படி அம்பாளும் தற்போது இருக்கும் சங்கரன் கோவில் இருக்கும் இடத்திற்கு வந்து ஊசி முனையில் ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் புரிந்தாள். அப்போது அரியும் அரனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி அளித்தனர். அரியும் அரனும் ஒருங்கே இணைந்த காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்தனர். சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, மார்பில் ருத்ராட்சம் மற்றும் இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் காட்சி அளித்தார். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், மார்பில் துளசி, கையில் சங்கு மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் தவம் புரிந்த அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி தந்த மாதம் ஆடி மாதம் என்று புராணம் கூறுகிறது. இதைத்தான் ஆடித்தபசு எனவும் கொண்டாடுகிறோம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : முகூர்த்த கால் கல்யாணத்தின் போது நடுவது ஏன் என்று தெரியுமா..?
ஆடித்தபசு உணர்த்தும் உண்மை
திடமான பக்தியுடனும், வைராக்கியத்தோடும் ஆடியில் விரதம் இருந்தால், வேண்டிய வரம் நிச்சயம் கிடைக்கும் என்பதை எல்லோருக்கும் உணர்த்துவதற்காகவே ஊசி முனையின் மீது ஒற்றைக்காலில் நின்று அன்னை தவம் புரிந்து, தான் வேண்டிய வரத்தை பெற்றுள்ளாள். மேலும் ஆடித்தபசு திருநாளில், அம்பிகையை அலங்கரிப்பதற்காகவும், அபிஷேகிப்பதற்காகவும் நம்மாலான பொருட்களை கொடுத்து, தரிசித்தால், தாலி பாக்கியம் நிலைக்கும். நினைத்ததுபோல வாழ்க்கைத் துணை அமையும் என நம்பப்படுகிறது. மேலும் ஆடிப் பௌர்ணமியில் விரதம் இருந்து அம்பிகை வழிபாடு செய்தால் அற்புதமான பலனகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில் அம்பிகையை வழிபட்டு அனைவரும் அம்பாள் அருளை பெறலாம்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇