தமிழ் திரையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் மலையாள திரையின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் சேர்ந்து எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டுள்ளது.
நடிகை நயன்தாரா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் மிகப்பெரிய நடிகையாக வலம் வருகிறார் என்பதும் ஆகவே தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரசிகர்கள் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

மஞ்சு வாரியர், நயன்தாராவுக்கு முன்பே மலையாள சினிமாவில் அறிமுகமாகி நிறைய படங்களில் நடித்தவர். அதன் பின் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் கடந்த 10 வருஷமாக மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
2 lady superstar teamed up
இருபது ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் திரையுலகில் இருந்தாலும் இருவரும் சேர்ந்து இன்னும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பதும், அது மட்டுமில்லாமல் எந்த ஒரு திரைப்பட விழாவிலும் இருவரும் இணைந்து பங்கேற்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்சமயம் நயன்தாரா மற்றும் மஞ்சு வாரியர் இணைந்த போட்டோக்களை மஞ்சு வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் ’நாம் எல்லோரும் நமக்குள் ஒரு அற்புதமான பெண்ணை வைத்திருக்கிறோம், இதோ என் பக்கத்தில் உள்ள இந்த பெண்ணை தான் சொல்கிறேன், ஐ லவ் மை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்றும் குறிப்பிட்டிருக்கிறார்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இந்த பதிவுக்கு அதிகமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வரும் நிலையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ரசிகர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ஜப்பான் கனவு நிறைவேறியதால் ராஷ்மிகா மகிழ்ச்சி
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇