Friday, July 11, 2025
HomePhoto Galleryஒரே ஒரு படம்.. பாலிவுட்டின் பிரபல நடிகைகளை அலற செய்த 16 வயது நடிகை.. யார்...

ஒரே ஒரு படம்.. பாலிவுட்டின் பிரபல நடிகைகளை அலற செய்த 16 வயது நடிகை.. யார் இவர்?

Date:

- Advertisement -

இந்தி திரையுலகில் புகழ்பெற்ற நடிகர்களாக நடித்து கொண்டிருக்கும் ஷாருக்கான், சல்மான்கான், ஆலியா பட், தீபிகா படுகோன், போன்றோர்களை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் பிரபலமான நடிகையாக 16 வயது இளம்பெண் பிரபலமாகியுள்ளார்.

இண்டர்நேஷனல் மூவி டேட்டா பேஸ் என்று சொல்லப்படும் ஐஎம்டிபி, இந்த வாரத்தின் மிகவும் பிரபலமானவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : Lemon Satham Easy | சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

அதில், பிரபல நடிகைகள் சோனாக்‌ஷி சின்ஹா, அதிதி ராய் ஹைத்ரி, சஞ்சீதா சேக் மற்றும் ஷர்மின் சேகல் போன்ற பல நட்சத்திரங்கள் இடம்பிடித்து உள்ளனர்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

ஆனால், அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர், லாபதா லேடீஸ் திரைப்படத்தில் நடித்திருக்கும் 16 வயது நடிகை நிதான்சி கோயல்.

16-year-old actress Bollywood famous

அமீர்கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கி இருந்த லாபதா லேடீஸ் திரைப்படம், ரயில் பயணத்தின்போது இரு பெண்களின் வாழ்க்கை மாறிப் போவதை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்டது.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இதையும் படிங்க : குமட்டல் வரும் போது என்ன சாப்பிட வேண்டும்?

அடிப்படை கல்வி அறிவு இல்லாத பெண்களது நிலை என்னவாக இருக்கிறது?உணவு, கல்வி, உடை உள்பட அடிப்படை விஷயங்களில் பெண்களுக்கு என்ன தேவை என்பதை பற்றிய நுணுக்கமான விஷயங்களை பேசி உ ள்ளது இந்த திரைப்படம்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

லாபதா லேடீஸ், திரைப்படத்தில் ஃபூல் குமாரி வேடத்தில் நடித்திருக்கும் நிதான்சி கோயல், அந்த கதைக்குத் தேவையான அப்பாவித்தனம், இயலாமை இரண்டையும் எதார்த்த நடிப்பால் பலரையும் கலங்க செய்துள்ளார்.

நிதான்சி கோயலின் வயது வெறும் 16 தான் ஆகிறது என்றாலும், பல தேர்ந்த நடிகைகளுக்கு இந்த ஒரு படத்திலேயே கடும் சவால் கொடுத்து இருக்கிறார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இந்த திரைப்படம் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ள நிலையில், இந்த திரைப்படத்திற்கு 8.5 புள்ளி கொடுத்து இருக்கிற ஐஎம்டிபி, அதன் நடிகை நிதான்சி கோயலுக்கும் முதலிடத்தை தந்துள்ளது.

இது தனக்கு மிகப்பெரியது எனக் கூறி இருக்கும் நிதான்சி கோயல், ”இதற்கு நன்றியுள்ளவளாக இருப்பேன், நன்றி ஐஎம்டிபி” என்றும் இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

16-year-old actress Bollywood famous
16-year-old actress Bollywood famous

இன்ஸ்டாகிராமில் 10 மில்லியனுக்கும் மேலாக ஃபாலோயர்களை கொண்டுள்ள நிதான்சி கோயலுக்கு, ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால், சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார் இந்த 16 வயது இளம் நடிகை.

GN gif

- Advertisement -

Related stories

spot_img
spot_img
spot_img

Related stories

Latest stories