கூகுள் நிறுவனம், கூகுள் பே, கூகுள் ஒன் மற்றும் விபிஎன் ஆகிய சேவைகளை நிறுத்துவதாக அறிவித்திருப்பதால் மக்கள் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
கூகுள் வரும் ஜுன் மாதத்தில் மிகப்பெரிய நடவடிக்கையை எடுப்பதற்கு முடிவு செய்திருக்கிறது. ஆம் ஜூன் மாதத்தில் Google Pay மற்றும் Google VPN சேவைகளை படிப்படியாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதனால் பல மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்ககூடிய நிலையில், இந்திய பயனர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று சொல்லப்படுகின்றது.

நிறுத்தப்படும் Google One VPN
வரும் ஜுன் மாதம் 20ம் தேதி கூகுளுக்குச் சொந்தமான Google One VPN சேவை நிறுத்தப்படவுள்ளது. இந்த சேவை இந்தியாவில் இதுவரை ஆரம்பிக்கவில்லை.. ஆதலால் இந்தி பயனர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Google Pixel 7 தொடர் பயனர்களுக்கு இலவச Pixel VPN சேவை தொடர்ந்து கொடுக்கப்படும். இதில் கூகுள் பிக்சல் 7, கூகுள் பிக்சல் 7 ப்ரோ, கூகுள் பிக்சல் 7 ஏ மற்றும் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
Google Pay will stop in June
அமெரிக்காவில் கூகுள் பே செயலி வரும் ஜூன் 4 முதல் மூடப்படும். இருப்பினும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்ற சந்தைகளில், Google Pay முன்பு போலவே இயங்கும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அமெரிக்க சந்தையில் கூகுள் பே சேவைக்கு பதிலாக, அமெரிக்காவிற்கு, இந்தியாவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட கூகுள் வாலட் வழங்கப்பட உள்ளது.
ஆனால் இந்தியாவில் கூகுள் மற்றும் கூகுள் பே இரண்டும் தனித்தனி சேவைகளாக செயல்படும். அதாவது இந்திய கூகுள் பே ஆப்ஸ் யூசர்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கூகுளின் 2 சேவைகள் நிறுத்தப்படுவது தொடர்பான செய்திகள் வெளிவந்து அதிர்ச்சியடைந்த நிலையில், தற்போது இந்த விளக்கம் எல்லோரையும் பெருமூச்சு விட வைத்திருக்கிறது.