Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா..? சுவையான கார பணியாரம் பண்ணி சாப்பிடுங்க..!

காலை மற்றும் இரவிலும் காரசாரமான, நல்ல சுவையான ஒரு ரெசிபியை மழைக்காலத்தில் சூடாக சாப்பிட வேண்டுமென்று நினைக்கிறீர்களா? அப்படியான அருமையான ரெசிபியை இங்கு உங்களுக்கு தருகின்றோம். வித்தியாசமான…

காலை மற்றும் இரவிலும் காரசாரமான, நல்ல சுவையான ஒரு ரெசிபியை மழைக்காலத்தில் சூடாக சாப்பிட வேண்டுமென்று நினைக்கிறீர்களா? அப்படியான அருமையான ரெசிபியை இங்கு உங்களுக்கு தருகின்றோம். வித்தியாசமான முறையில் இந்த கார பணியாரம் மற்றும் மொறு மொறுப்பான அடை தோசை எப்படி தயார் செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

வீட்டில் நாள் தோறும் இட்லி, தோசை போன்ற உணவுகளை சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். காலையிலும், இரவிலும் சுவையான நல்ல காரசாரமான ஒரு ரெபிசியை மழைக்காலத்தில் சூடாக சாப்பிட வேண்டும் என்று நினைக்க தோன்றுகிறதா, அப்படியான சூப்பர் ரெபிசியை உங்களுக்கு கொடுக்கிறோம். வித்தியாசமான முறையில் கார பணியாரம், மொறு மொறு அடை தோசை எப்படி தயார் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். ஒரு முறை இதை உங்கள் குழந்தைகளுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் செய்து கொடுத்தால் நாள் தோறும் செய்து கொடுக்கும் படி சொல்வார்கள். அப்படி ஒரு மறக்க முடியாத சுவையுள்ளதாக இந்த ரெசிபி இருக்கும்.

Kara Paniyaram
Kara Paniyaram

கார பணியாரம் | Kara Paniyaram

கார பணியாரம்( Kara Paniyaram ) செய்வதற்கு தேவையான பொருட்கள்:
  • இட்லி மாவு – 4 பெரிய கப் (மாவு நன்றாக புளித்து இருந்தால் நல்லது)
  • வெங்காயம் – 3
  • பச்சை மிளகாய் – 2
  • உளுத்தம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – அரை ஸ்பூன்
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • இஞ்சி
  • கொத்தமல்லி – 1 கையளவு
  • எண்ணெய் – அரை கப்
  • சோடா உப்பு – சிறிதளவு

கார பணியாரம் செய்வது எப்படி..?

முதலில் எடுத்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நன்றாக புளித்த இட்லி மாவில் சிறிதளவு சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இப்போது, அடுப்பை ஆன் பண்ணி ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி கொள்ளவும்.

அதன்பிறகு, 1/2 ஸ்பூன் கடுகு மற்றும் சீரகம் போட்டு தாளிக்கவும். இவை நன்கு பொரிந்தவுடன் எடுத்துவைத்துள்ள வெள்ளை உளுத்தப்பருப்பை அதனுள் போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.

தொடர்ந்து, பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்றாக வதக்கி கொள்ளவும்.

வெங்காயமும் பொன்னிறமாக நன்கு வெந்ததும், இவைகளை புளித்த இட்லி மாவில் போட்டு கலக்கி கொள்ளவும்.

உங்களுக்கு கொத்தமல்லி சுவையும், அதன் மணமும் பிடிக்குமானால், ஒரு கை அளவிலான கொத்தமல்லி இலையை பொடி பொடியாக நறுக்கி அதில் சேர்த்துகொண்டு கலக்கலாம்.

மறுபடியும் அடுப்பை ஆன் செய்து பணியாரம் செய்யும் சட்டியை வைத்து எண்ணெய் எல்லா இடங்களில் படுமாறு தடவவும்.

இப்போது, பணியார குழிகளில் எண்ணெய் கொஞ்சம் காய்ந்ததும் பணியார மாவு கலவையை பணியார குழிகளில் பாதி பங்கு அல்லது முக்கால் பங்கு நிரம்பும் வரை ஊற்றி கொள்ளவும்.

இப்போது, ஒரு கூர்மையான கம்பியை எடுத்து பணியாரம் வெந்துவிட்டதா என்பதை குத்தி பார்க்கவும், அதன் தொடர்ச்சியாக பணியாரத்தை திருப்பி போட்டு வேகவிடுங்கள்.

மீண்டும், ஒரு முறை பணியாரத்தை குத்தி பார்த்து வெந்துவிட்டதா என்பதை சோதனை செய்த பிறகு இறக்கினால் சுவையான கார பணியாரம் தயார்.

இவற்றை சாம்பார் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க : என்ன ஆனது சமந்தாவிற்கு? சமந்தாவைப் பார்த்து ரசிகர்கள் கவலை…

அடை

அடை செய்ய தேவையான பொருட்கள்:
  • பச்சரிசி – ஒரு கப்
  • உளுத்தம் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • துவரம் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • கடலை பருப்பு – அரை கப்
  • பாசி பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • வர மிளகாய் – 10
  • மிளகு – 1/4 ஸ்பூன்
  • தேங்காய் – 4 கீத்து
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • உப்பு – தேவையான அளவு

சுவையான அடை தயார் செய்வது எப்படி..?

முதலில் எடுத்து வைத்துள்ள பச்சரிசி, 10 காய்ந்த மிளகாய் மற்றும் பருப்பு வகைகள் எல்லாவற்றையும் இரவு முதல் அல்லது குறைந்தது 3 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும்.

அதன்பிறகு, தண்ணீரை வடிகட்டி விட்டு அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து வைத்து கொள்ளவும்.

இப்போது, அரைத்த மாவை தனியாக எடுத்து வைத்தும் அதில் சிறிது பொடியாக நறுக்கி வைத்த தேங்காய் கீத்து, பொடி பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, 3, 4 காக அரைக்கப்பட்ட மிளகு மற்றும் உப்பு போன்றவற்றை போட்டு கலக்கி கொள்ளவும்.

இப்போது அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து ஊற்றவும்

உங்களுக்கு தேவையான அளவில் தடிமனாகவோ அல்லது மெல்லியதாகவோ ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெயை தெளிக்கவும்.

அவ்வளவுதான், இதை வேகவைத்து எடுத்தால் சுவையான, அருமையான மொறு மொறு அடை தோசை தயார்.

அடை தோசையை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் வைத்து சாப்பிடலாம்.

இதையும் படிங்க : திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்லும் முறை.. சித்தர்கள் நம்பிக்கையும் ஆன்மிக வரலாறும் இதுதான்!