பிரதமர் மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக உள்ளவர் நிர்மலா சீதாராமன். தற்சமயம் கர்நாடகா ராஜ்யசபா எம்.பி யாக இருக்கிறார்.
தமிழ்நாடு, ஆந்திராவில் லோக்சபா தேர்தலில் போட்டியிடக்கூடிய அளவிற்கு பணமில்லை என்று நிர்மலா சீதாராமன் பேசியது
கடந்த இரண்டு தினங்களாக தேசிய அளவில் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஆம் வருடம் ராஜ்யசபா தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவரின் சொத்து விபரத்தை பிராமண பத்திரமாக தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவருடைய ஆண்டு வருமானம் ரூ.30.44லட்சம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தனது பெயரில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள விவசாயம் சாராத நிலம், ரூ.35.52 லட்சம் மதிப்பிலான வங்கி டெபாசிட்டுகள் மற்றும் ரூ.18.39 லட்சம் மதிப்பு கொண்ட நகைகள் உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
ரூ.1.87 கோடி மதிப்புள்ள அசையா சொத்தும், ரூ.69.12 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் சேர்த்து மொத்தம் 2.56 கோடி உள்ளதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.